www.garudabazaar.com

LEO லோகேஷ் கனகராஜ் உடன் பிரபல மாடல் நடிகை.. இவங்க தானா?  வைரல் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பிரபல மாடல் நடிகை  தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leo Lokesh Kanagaraj with actress Nandini Nagaraj

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பாபா பட ரீ ரிலீஸ்.. வரலாறு படைத்த வசூல்.. படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் அளித்த நினைவுப்பரிசு!

நடிகர் விஜய் நடிப்பில்  'லியோ' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.S .லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த மாடல் நடிகை நந்தினி நாகராஜ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், "சுயம்புவாக உருவான தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ்" என்றும் தலைப்பிட்டுள்ளார். அந்த பதிவில் லியோ & தளபதி 67 படத்தின் ஹேஸ்டேக்குகளையும் நந்தினி பதிவிட்டுள்ளார்.

Also Read | 'LEO' Shoot நடக்கும் காஷ்மீர்ல LEGEND சரவணன்.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Leo Lokesh Kanagaraj with actress Nandini Nagaraj

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Nandini Nagaraj will find this news story useful.