www.garudabazaar.com

மீண்டும் இணைந்த பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்கள் பலர் மீண்டும் சந்தித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

BiggBoss season 6 contestants Reunited pic goes viral

Image Credit : Vijay Television

Also Read | "என் Dress எப்படி இருக்கு?".. சிவகார்த்திகேயனுடன் மழலை மொழியில் பேசும் சிறுமி.. Cute வீடியோ..!

தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.

BiggBoss season 6 contestants Reunited pic goes viral

Image Credit : Vijay Television

மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

BiggBoss season 6 contestants Reunited pic goes viral

Image Credits : Vijay Television 

தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும். பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களுக்கு என சோசியல் மீடியாவில் ரசிகர் படையும் உருவாகி, போட்டி குறித்தும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதங்கள் நடத்தி வந்தனர்.

BiggBoss season 6 contestants Reunited pic goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களில் ஒருவரான மகேஸ்வரி தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், விக்ரமன், அசல் கோலார், ராம், ADK, ரச்சிதா மஹாலக்ஷ்மி, ஷிவின், ஷெரினா ஆகியோர் புன்னகையுடன் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

BiggBoss season 6 contestants Reunited pic goes viral

Images are subject to © copyright to their respective owners.

இன்னொரு புகைப்படத்தில் மகேஸ்வரி, ரச்சிதா மஹாலக்ஷ்மி, ஷிவின், ஷெரினா மட்டும் இடம்பெற்றிருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | நடிகர் யோகி பாபு பகிர்ந்த ஓவியம்.. அட ‘வாரிசு’ விஜய்யும் இருக்காரா?.. வைரலாகும் Pic..!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss season 6 contestants Reunited pic goes viral

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Season 6 contestants, Bigg Boss Tamil, BiggBoss season 6 contestants Reunited picture will find this news story useful.