www.garudabazaar.com

'LEO' Shoot நடக்கும் காஷ்மீர்ல LEGEND சரவணன்.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தி லெஜண்ட்' பட நடிகர் சரவணன்  காஷ்மீரில் இருந்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Legend Saravanan Arul at Kashmir Shared a Video

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அரசியலுக்கு வருவீங்களா?.. ரசிகரின் பரபரப்பு கேள்வி.. கங்கனா ரனாவத் அளித்த பதில்!

நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

விரைவில் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Legend Saravanan Arul at Kashmir Shared a Video

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை மற்றும் ஒடிடி உரிமைகளில் சேட்டிலைட் உரிமை 20 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Legend Saravanan Arul at Kashmir Shared a Video

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் லெஜண்ட் சரவணன், தமது டிவிட்டர் பக்கத்தில் காஷ்மீரில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அறையில் இருந்து பனிமலையை வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும் "உலகின் சொர்க்கம் நமது காஷ்மீர்" என்றும் சரவணன் பதிவு செய்துள்ளார்.

லியோ படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீர் பகுதியில் நடப்பதால் இந்த பதிவில் ரசிகர்கள் லியோ படம் குறித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read | பாபா பட ரீ ரிலீஸ்.. வரலாறு படைத்த வசூல்.. படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் அளித்த நினைவுப்பரிசு!

தொடர்புடைய இணைப்புகள்

Legend Saravanan Arul at Kashmir Shared a Video

People looking for online information on Legend Saravanan, Legend Saravanan Arul, Leo will find this news story useful.