பிக்பாஸ்க்கு பிறகு 'கவின்' நடிக்கும் முதல் படம்... 'பிகில்' நடிகை ஜோடி - 'செம' டைட்டில் வெளியானது..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட லாஸ்லியா மீது இவருக்கு காதல் வந்தது. இவர்கள் காதலுக்கு பல ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வினீத் இயக்கி, தயாரிக்கிறார். முழு படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா நடிக்கிறார். லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்துக்கு 'லிப்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பாத்தின் பர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 13 ஆம் தேதி வெளிவருகிறது. இந்த செய்தியினால் கவின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.