விஜய்யின் மாஸ்டர் - வந்துவிட்டது வாத்தி கம்மிங் - தளபதி கெத்து.. தர லோக்கல் குத்து.!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து தர லோக்கலான வாத்தி கம்மிங் பாடல் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வைரல் ஹிட் அடித்தது.
இந்நிலையில் தற்போது மாஸ்டரில் இருந்து வாத்தி கம்மிங் பாடல் வெளியாகியுள்ளது. தர லோக்கல் குத்து பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. அனிருத் மற்றும் கானா பாலச்சந்தர் பாடியிருக்கும் இப்பாடலை கானா பாலச்சந்தரே எழுதியிருக்கிறார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் வாத்தி கம்மிங்கை ட்ரென்ட் அடித்து வருகிறார்கள்.
#VaathiComing - https://t.co/X0VYY6ExYL#ThalapathyKuthu 🔥🔥🔥@actorvijay @Dir_Lokesh @XBFilmCreators @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @andrea_jeremiah #MasterSecondSingle
— Anirudh Ravichander (@anirudhofficial) March 10, 2020
விஜய்யின் மாஸ்டர் - வந்துவிட்டது வாத்தி கம்மிங் - தளபதி கெத்து.. தர லோக்கல் குத்து.! வீடியோ