குட்டி தேவதையுடன் ஒரு க்யூட் டான்ஸ் - மகளுடன் அழகான வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் நடிகர்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது மகளுடன் க்யூட் டான்ஸ் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அபியும் நானும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். இதையடுத்து இவர் உன்னை போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்திலும் இவர் அசத்தினார். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று இவர் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது மகளுடன் செம ஜாலியாக ஹிந்தி பாடலுக்கு ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ''என் குட்டி இளவரசியுடன் மெதுவாக ஒரு நடனம், அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ரெட்ரோ பாலிவுட் பாடல்களுடன்' என அவர் பதிவிட்டுள்ளார். கணேஷ் வெங்கட்ராமின் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Tags : Ganesh Venkatram, BIGGBOSS TAMIL