பிக்பாஸ் கவின்.. கலங்க வைக்கும் வீடியோ - பிரிந்து போன உயிர் மீண்டும் கிடைத்தால் இப்படிதான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் கலங்க வைக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

நடிகர் கவின் பகிர்ந்த எமோஷனல் வீடியோ | biggboss fame actor kavin shares an emotional video of dogs

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர் கவின். இதையடுத்து சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் நடித்து இவர் பிரபலமானார். சில படங்களில் சிறிய வேடத்தில் தோன்றிய இவர், நட்புனா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவானார். மேலும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று இவர் தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். பல நாட்களாக வளர்ப்பவரின் வீட்டை விட்டு பிரிந்து கிடக்கும் நாய்கள், மீண்டும் அவர்களிடம் சேரும் போது, நடக்கும் நெகிழ்ச்சியான தருனங்களை தொகுத்து உருவான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவுடன், ''அன்பெனப்படுவது யாதெனில்'' என அவர் பதிவிட்டுள்ளார். கவினின் இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431) on

Entertainment sub editor