'எப்படி இருக்கிறது சூர்யாவின் என்ஜிகே ?' - கேரள ரசிகர்கள் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிரீம் வாரியர்ஸ் புரொடக்ஷன் சார்பில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'என்ஜிகே'. மே 31 அன்று வெளியான இப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Kerala fans Celebrates Suriya and Yuvan Shankar Raja's NGK release

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பிரவீன் கேஎல் இந்த படத்துக்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார். இந்த படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யாவிற்கு தமிழ்நாடு போலவே ஆந்திரா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். என்ஜிகே திரைப்படம் வெளியான கேரள திரையரங்கம் ஒன்றில் நாதஸ்வரம், மேளம் என சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

தமிழ்நாட்டு திரையரங்குகள் போலவே எங்கு காணினும் சூர்யாவின் கட் அவுட்களால் நிறைந்திருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் மீடியாக்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

'எப்படி இருக்கிறது சூர்யாவின் என்ஜிகே ?' - கேரள ரசிகர்கள் பதில் வீடியோ