தனுஷின் 'அசுரன்' படத்தில் அடுத்த பாடல் குறித்து அறிவித்த ஜி.வி.பிரகாஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

GV Prakash tweets about Dhanush, Vetrimaaran's Asuran SOng

இந்த படத்தில் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், அபிராமி, கருணாஸ் மகன் கென் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து பொல்லாத பூமி,  கத்திரி பூவழகி என்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் குறித்து ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். அதில் அசுரனில் தீம் பாடல்  இரத்த பாதை. வா எழுந்துவா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.