www.garudabazaar.com

“மாஸ்டர்னாலே கண்டம்..” .. டிவி நிகழ்ச்சியில் பொசுக்குனு சொன்ன ரச்சிதா.!.. 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று நடைபெற்று வந்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சயின் 6 ஆவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்து முடிந்தது.

Rachitha viral comment about robert bigg boss kondattam

Image Credit : vijay television

Also Read | நெற்றி நிறைய விபூதி பூசி பழனி மலையில் கிரிவலம் சென்ற சந்தானம்..! வைரலாகும் வீடியோ

சுமார் 106 நாட்கள் நடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், எமோஷனல் என அனைத்தும் நிறைந்து விறுவிறுப்புடன் சென்றதால் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த பேச்சு அதிகம் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியே சென்றாலும் மக்கள் அனைவரும் அமோகமான வரவேற்பு கொடுத்ததும் வருகின்றனர்.

Rachitha viral comment about robert bigg boss kondattam

Image Credit : vijay television

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வார இறுதியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இறுதியில் கலந்துகொண்ட பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளர்கள் குழந்தைகள் போல் பேச, டிஎஸ்கே இவர்களை கலகலப்பாக கேள்விகளை கேட்டார்.

Rachitha viral comment about robert bigg boss kondattam

Image Credit : vijay television

அப்போது குழந்தை போல் பேசிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி, எனக்கு தண்ணீர் என்றால் கண்டம், பிக்பாஸ் என்றால் கண்டம், மாஸ்டர் என்றாலும் கண்டம் என காமெடியாக பேசிய விஷயம் வைரலானது. பிக்பாஸ் வீட்டுக்குள் ரச்சிதா மீது சிறப்பு கவனம் செலுத்தியதாக ராபர்ட் மாஸ்டரிடம் பலமுறை அழைத்து பேசிய ரச்சிதா, தன்னிடம் இயல்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Bakasuran : செல்வராகவன் நடிப்பில் பகாசூரன்.. பட போஸ்டரை ஒட்டிய இயக்குநர் மோகன்.ஜி .. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha viral comment about robert bigg boss kondattam

People looking for online information on Bigg boss, Rachitha will find this news story useful.