www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. வாழ்த்து கூறி Unseen போட்டோவை வெளியிட்ட அடுத்த பட இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

SivaKarthikeyan Birthday Wishes from Ayalaan Director

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ட்ரீட்.. மரண மாஸ் SK டான்ஸோடு வெளியான மாவீரன் சிங்கிள்!  

ஆரம்ப காலங்களில் மெமிக்ரி, டிவி தொகுப்பாளராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

"டான்" படத்துக்கு பின்,  இயக்குனர் ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்   தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

மாவீரன் படத்தோடு அயலான் & நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன், இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு அயலான் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தமது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். அதில், " மகிழ்வும், நலனும் நிறைந்திருக்க அன்புச் சகோதரர் சிவகார்த்திகேயன்  அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐" என பதிவிட்டுள்ளார்.

Also Read | அஜித் நடித்த 'துணிவு'.. படம் பார்த்துவிட்டு ஒரே வார்த்தையில் ட்வீட் செய்த தினேஷ் கார்த்திக்..!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Birthday Wishes from Ayalaan Director

People looking for online information on Ayalaan, Ayalaan Director, Maveeran, Sivakarthikeyan will find this news story useful.