www.garudabazaar.com

"எமோஷனலா டச் பண்ணுச்சு.!" - கவின் நடித்த ‘டாடா’ படத்த பத்தி நடிகர் லாரான்ஸ் நெகிழ்ச்சி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவின் நடிப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் 'டாடா'. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

Raghava Lawrence Wishes Kavin DaDa movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Rolex சூர்யாவை சந்திச்ச ஜாம்பவான் சச்சின்.. புகைப்படத்தை பகிர்ந்து தமிழிலேயே போட்ட கேப்ஷன்!!

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக டாடா திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தொடர்ந்து, திரைப்படமும் வெளியான சூழலில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சிறந்த படமாகவும் மாறி உள்ளது. இந்த நிலையில், " டாடா " படத்தை  பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் நாயகன் கவின் மற்றும் நாயகி அபர்ணா தாஸ், தயாரிப்பாளர் அம்பேத்குமார், இயக்குனர் கணேஷ் K பாபு மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் தன்னை எமோஷனலாக தொட்டதாகவும், அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பார்ப்பதற்கான படமென்றும் நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Also Read | Madhan Karky : பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்பலாம் அதிக Songs எழுதாதற்கு காரணம் இதுதானா..? செம..

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence Wishes Kavin DaDa movie

People looking for online information on Aparna Das, Dada, Kavin will find this news story useful.