'ரஜினி ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தமிழக முழுவதும் தனது கட்சியை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து அவரது கட்சியின் சின்னமாக தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை வழங்கியுள்ளது.

Kamal Haasan believes that RajiniKanth will support him for Lok sabha election

இந்நிலையில் சமீபத்தில்  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், எங்களுடைய கூட்டணி, மக்கள் கூட்டணி, நிச்சயம் வெல்லும் கூட்டணி.  மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப்படும்.  ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என செய்தியாளர்கள் கேட்ட போது, ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று  தெரிவித்தார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த ரஜினிகாந்த், தண்ணீர் பிரச்சனையை தீர்க்கின்ற கட்சிக்கு வாக்களிக்குமாறு தனது ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.  தற்போது தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.