Bigg Boss 3: கைய பிடிச்சு இழுத்துட்டாண்டா - கவினிடம் பஞ்சாயத்து பண்ணும் லாஸ்லியா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 27, 2019 09:45 AM
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டை விட்டு கஸ்தூரி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கமல், இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது என்று அறிவித்தார்.

ஆனாலும் அது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் நேற்றைய தினம் வழக்கம் போல நாமினேஷன் செய்தனர். பெரும்பாலானோர் மைக்கிலிருந்து பேட்டரியை கழட்டி பேசியதற்காக கவினை நாமினேட் செய்தனர். இந்த வாரம் முதன் முதலாக ஷெரின் நாமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரம் கமலால் கவின் சற்று கடுமையாகவே விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 27) புதிய புரோமோ ஒளிபரப்பாகியுள்ளது. அதில் மீண்டும் கிராமத்து டாஸ்க். போட்டியாளர்கள் இரு கிராமங்களாக பிரிய வேண்டும். போட்டியாளர்களுக்கு கிராமியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்படும். தினமும் மாலையில் அதனை அவர்கள் செய்து காட்டவேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.
கிராமத்து ஸ்டைலில் சேலை கட்டியிருக்கும் லாஸ்லியா, கவினை பார்த்து இவன் என் கைய படுத்து இழுத்துட்டான்டா என்று ஜாலியாக பஞ்சாயத்து செய்கிறார்.
BIGG BOSS 3: கைய பிடிச்சு இழுத்துட்டாண்டா - கவினிடம் பஞ்சாயத்து பண்ணும் லாஸ்லியா வீடியோ