பிக்பாஸில் இருந்து நேரடியாக வெளியேறுகிறாரா கஸ்தூரி ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 25, 2019 07:22 PM
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியின் மூலம் வனிதாவும் கஸ்தூரியும் உள்ளே நுழைந்ததற்கு பிறகு நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியது.
நேற்றைய நிகழ்ச்சியில் லக்ஷரி பட்ஜெட் மதிப்பெண்கள் குறைந்ததற்கு என்ன காரணம் தெரியுமா என்று போட்டியாளர்களை கேட்ட கமல், குறும்படம் மூலம் அவற்றை விளக்கினார். அதில், கவினும், லாஸ்லியாவும் மைக்கை எடுத்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அந்த விதிமீறலுக்காக இருவரையும் கடுமையாக கமல் எச்சரித்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்று கமல் அறிவிப்பார் என்பதால் அதனை அறிந்து கொள்ள ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கஸ்தூரி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும் அவரை சீக்ரெட் ரூமில் இருக்க சொன்னதற்கு அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது.