கவினை வெளியேற்ற திட்டமிடும் போட்டியாளர்கள்! ப்ரோமோ வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளர் என்று கருதப்பட்ட கவின், கடந்த சில நாட்களாக காதலில் விழுந்து வீக்கான போட்டியாளராக மாறிவிட்டார். இருப்பினும் நட்புக்கு அவர் கொடுத்து வரும் முக்கியத்துவம்தான் அவரை இன்னும் வீட்டில் இருக்க வைத்துள்ளது

Bigg Boss 3 Tamil August 26 Kavin Losliya Hotstar Vijay Tv Kamal

இந்த நிலையில் கவின் நெருங்கிய நண்பர்களான தர்ஷன், முகின் ஆகிய இருவரும் இன்று கவினை நாமினேட் செய்கின்றனர். லாஸ்லியா விவகாரத்தில் கவின் நடவடிக்கை சரியில்லை என்று குற்றஞ்சாட்டும் முகின், தர்ஷன் இருவரும் கவினை நாமினேட் செய்வதாக கூறுகின்றனர். அதேபோல் லாஸ்லியா விவகாரத்தில் தன்னுடைய அறிவுரையையும் மீறி கவின் நடந்து கொள்வதால் சேரனும் நாமினேட் செய்கின்றார்.

ஆனால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என கமல் கூறியிருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

கவினை வெளியேற்ற திட்டமிடும் போட்டியாளர்கள்! ப்ரோமோ வீடியோ வீடியோ