"பிக் பாஸ் வீட்டை சுற்றுலா தலமாக மாற்றி விடவேண்டாம்" - கமல் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 25, 2019 01:06 PM
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் மைக்கை ஆஃப் செய்துவிட்டு ரகசியமாக பேசியதை கண்டித்த கமல்ஹாசன், இன்று கன்ஃபக்சன் அறைக்கு லாஸ்லியாவை வரவழைத்து பிக்பாஸ் என்பது ஒரு போட்டித்தளம் என்றும், இதனை சுற்றுலாத்தளமாக மாற்றிவிட வேண்டாம் என்றும் கண்டித்தார்.

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் டாஸ்க் உள்பட எதிலும் கவனம் செலுத்தாமல் காதலில் முழ்கி வருகின்றனர். இதனை பெயர் குறிப்பிடாமல் கூறிய கமல், 'பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட வேண்டாம் என்றும், இந்த வீட்டிற்கு வரும்போது உங்களுக்கு எப்படி யாரையும் தெரியாதோ, அதை அப்படியே மெய்ண்டன் செய்து போட்டியில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு செயல்படுங்கள் என்று கூறினார்
இதனை அறிவுரையாக லாஸ்லியா ஏற்று கொண்டாலும், இந்த விஷயத்தை பொதுவாக கமல் கூறியிருக்கலாம் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்த, தான் பொதுவாகத்தான் கூறியதாகவும் யார் பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை என்றும் பதிலளித்தார். மொத்தத்தில் கவின், லாஸ்லியாவை கமல் குறிவைத்துவிட்டார் என்பது மட்டும் தெரிகிறது
"பிக் பாஸ் வீட்டை சுற்றுலா தலமாக மாற்றி விடவேண்டாம்" - கமல் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ