உன்ன காப்பாற்ற நினைப்பவர்கள் என்னை..! கவின் - லொஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 26, 2019 12:56 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கடந்த வார இறுதியில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். அவருக்கு சீகரட் ரூம் வாய்ப்பு கொடுத்தும் அதை அவர் வேண்டாம் என ஒதுக்கிவிட்டார்.

அதே வேளையில் கமல்ஹாசன் காதல் வலையில் இருக்கும் கவின், லாஸ்லியா இருவரும் இருட்டில் மைக் பேட்டரியை கழற்றிவிட்டு பேசியதை தவறாக சுட்டிக்காட்டினார்.
லொஸ்லியாவையும் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் மறைமுகமாக உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று காலை வெளியான புரமோவில் கவினை எல்லோரும் நாமினேட் செய்கிறார்கள்.
தற்போது வந்துள்ள புரமோவில் கவின் லொஸ்லியாவும் உன்னை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் என்னை வெளியனுப்பிவிடுவார்கள் என புலம்புகிறார். அவர் குறிப்பிடுவது சேரன் என்பதை அனைவரும் அறிவீர்கள் தானே..
ஏற்கனவே சேரன் தன் மகளாக நினைக்கும் லாஸ்லியாவை கவினிடமிருந்து காப்பாற்ற நினைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உன்ன காப்பாற்ற நினைப்பவர்கள் என்னை..! கவின் - லொஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ