சேனாபதி என்ட்ரி! - ஷங்கர் - அனிருத்தின் 'இந்தியன் 2' ஷுட்டிங் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 27, 2019 09:12 AM
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் கே.சுபாஷ்கரன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, விவேக், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தான் கமலுடன் விவேக்கிற்கு முதல் படம் என்பதால் அதனை அவர் உணர்ச்சிப் பெருக்குடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த படத்தின் ஷுட்டிங் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தது. அதன் படி கமல் நேற்றுமுதல் (ஆகஸ்ட் 26) இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளாராம். மேலும் கமல்ஹாசனுக்கும் பிரியா பவானி ஷங்கருக்கும் இடையேயான காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டதாம்.