கமல்ஹாசனின் "இந்தியன்2" படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 23, 2019 11:02 AM
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இம்மாத இறுதியில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடிப்பார் என்றும் கருதப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் விவேக் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என முன்பே கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.
கால்ஷீட் பிரச்சனை காரணமாக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த முடிவு எடுத்துள்ளர் என தெரிகிறது. ஷங்கர் படத்தை அவர் நிராகரித்திருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் தான்.