கேமரா அப்பல்லோல வாங்குனதா ? - பிக்பாஸில் மதுமிதா விவகாரம் குறித்து பிரபல நடிகர் நக்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் சுவாரஸியமாக தொகுத்து வழங்கி வருகிறார். அவரது பங்களிப்பால் மூன்று சீசன்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

S Ve Shekher tweets about Madhumitha issue in Kamal Haasan Bigg Boss 3

தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு போட்டியாளர்களை மிகவும் நேர்த்தியாக கையாளும் விதம் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் கடந்த வாரம் மதுமிதாவின் வெளியேற்றுப்படலம்.

அந்த விவகாரம் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் இந்த விவகாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், சம்பவம் நடந்தபோது அங்க இருந்த காமிரால்லாம் வேலை செய்யலை. ஏன்னா அதெல்லாம் அப்போல்லோல வாங்கினது. என்று நக்கலாக கமென்ட் செய்துள்ளார்.