'என் மகளுக்கு முதல் படமே தளபதி விஜய் கூட...' - பிரபல நடிகர் பெருமிதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து அட்லி இயக்கி தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

Robo Shankar speaks about Thalapathy Vijay's Bigil

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தில் தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து Behindwoods TVக்கு பேசிய ரோபோ ஷங்கர், ''டிக் டாக் பார்த்து தான் அட்லி கூப்ட்டிருக்கார். ஒரு மாதம் ஃபுட் பால் டிரெயினிங் கொடுத்தாங்க. முக்கியமான வேடம் படத்துல. தளபதி விஜய் என்னிடம் இப்படி ஒரு வேடத்தில் உங்கள் மகளை நடிக்க வைக்க சம்மதித்தற்கு நன்றி தெரிவித்தார்.

அதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றேன். நமக்கெல்லாம் ஒரு பெரும் போராட்டத்துக்கு பிறகு தான் மாரி என்கிற படத்தின் மூலம் ஒரு அடையாளம் கிடைத்தது. ஆனால் என் மகளுக்கு முதல் படமே தளபதி விஜய் கூட என்றால் அந்த வாய்ப்பை யாரும் தவற விட மாட்டார்கள் என்று தளபதி விஜய்யிடம் சொன்னேன். உங்க பொண்ணு பின்னி பிடலெடுத்துட்டா. எங்க வீட்டு பொண்ணு மாதிரி நாங்க பார்த்துகிறோம் என்று விஜய் சொன்னார்'' என்று பேசினார்.

'என் மகளுக்கு முதல் படமே தளபதி விஜய் கூட...' - பிரபல நடிகர் பெருமிதம்! வீடியோ