பிரபாஸின் 'சாஹோ'வில் இருந்து வெளியான "உண்மை எனது பொய் எனது'' வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலியின் 2 பாகங்களுக்கும் கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடித்துள்ளார்.

Saaho Video Song Prabhas Shraddha k Shankar Mahadevan

யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ''உண்மை எனது பொய் எனது'' என்கிற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை தமிழில் மதன் கார்க்கி  எழுதியுள்ளார். பாட்ஷா இசையமைத்துள்ள இந்த பாடலை ஷங்கர் மஹாதேவன் மற்றும்  சுவேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர்.

பிரபாஸின் 'சாஹோ'வில் இருந்து வெளியான "உண்மை எனது பொய் எனது'' வீடியோ சாங் இதோ வீடியோ