பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவினுக்கு டாஸ்க் என்ற பெயரில் ஆப்பு வைத்துள்ளார்கள்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவின் மீது அபிராமிக்கு ஈர்ப்பு உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் கவினுக்கு சாக்ஷி மீது அக்கறை இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
மேலும் இன்னும் சில நாட்களில் முக்கோண காதல் கதை உருவாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ப்ரொமோ வீடியோவில் கவினுக்கு வாயை மூடி பேசவும் என்கிற டாஸ்க் கொடுப்பதாக காட்டுகிறார்கள். அதாவது கவின் நாள் முழுவதும் தனது கேர்ள் பிரண்டிடம் சைகையால் மட்டுமே பேச வேண்டுமாம். அபிராமி, சாக்ஷி, ஷெரின், ரேஷ்மா, லாஸ்லியா, வனிதா ஆகியோர் தான் அந்த கேர்ள் பிரெண்ட்ஸ்.
வாயை மூடி பேசவும்..! 😀😀#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/59mM7dGcmp
— Vijay Television (@vijaytelevision) June 27, 2019
பிக் பாஸ் வீட்டில் கவினுக்கு இத்தனை GIRL FRIEND-ஆ? - புதிய புரொமோ வீடியோ