பிக்பாஸ் சீசன் 3 தொடக்கம் முதலே அபிராமி - கவிண் இடையே துளிர் விடும் காதல், தண்ணீர், எரிவாயு ஆகியவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் போட்டியாளர்களுக்கிடையே ஏற்படும் சிறு சிறு உரசல்கள் என சுவாரஸியமாக நகர்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் இன்று ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிக்கான புதிய புரோமோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளது. புது போட்டியாளரான மீரா மிதுன் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
நுழையும் போதே அபிராமி, சாக்ஸி உள்ளிட்டோர் வரவேற்கவில்லை. மூவரும் மாடல் என்பதால் இருவருக்குள்ளும் ஏற்கனவே பிரச்சனை இருக்கலாம் அதனால் அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் புதிய புரோமோவில் வனிதா விஜயகுமார், அபிராமி ஆகியோருடன் மீரா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது அபிராமி பேசாதனு வேகமாக செல்கிறார். வனிதா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/jOIByBkk8c
— Vijay Television (@vijaytelevision) June 26, 2019