பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஐத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஆரம்பத்திலேயே கலைகட்டத் தொடங்கியுள்ளது. காதல் மோதல் என பரபரப்புத் தொற்றிக்கொண்டுள்ளது.
![Kaajal Pasupathi praised Sandy In Kamal Haasan's Bigg Boss 3 Kaajal Pasupathi praised Sandy In Kamal Haasan's Bigg Boss 3](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kaajal-pasupathi-praised-sandy-in-kamal-haasans-bigg-boss-3-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடன அமைப்பாளர் சாண்டியும் கலந்துகொண்டு அனைவரிடமும் கலகலப்பாக பழகி வருகிறார். இது குறித்து பிக்பாஸ் இரண்டாவது சீஸனில் கலந்துகொண்ட காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நடன அமைப்பாளர் சாண்டியை பற்றி பதிவை எழுதியுள்ளார்.
அதில் , அவரின் நகைச்சுவை உணர்வை நேசிக்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார். என்றும் பிக்பாஸில் சாண்டி நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்து, அங்க பார் அவர் கையத் தட்ட உண்டாச்சு உலகம் என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.
I have always loved his sense of humour... He's being himself there. https://t.co/NQWZzVO6n0
— Kaajal Pasupathi (@kaajalActress) June 26, 2019