ஜீவாவின் ஜிப்ஸி ஸ்னீக் பீக் - சென்சார் போர்ட் வெட்டிய காட்சியை வெளியிட்ட படக்குழு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்தில் இருந்து வேற லெவலான ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியானது.

ஜிப்ஸி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி | jiiva rajumurugan's gypsy sneak peak is out

ஜீவா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில், கிட்டார் இசை கலைஞனாக வாழும் ஜிப்ஸியாக ஜீவா நடித்துள்ளார். வரும் மார்ச் 6 முதல் ஜிப்ஸி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஜிப்ஸி படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியானது. ஆதார் அட்டை இல்லாமல் பொது இடங்களில் வாழும் சிலரை போலீஸ் விசாரிப்பதும், அவர்களுக்கு ஆதரவாக ஜீவா பேசுவது போன்றும் இக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்துக்கு தியேட்டரில் எழுந்து நிற்பது போன்ற விஷயங்கள் குறித்து ராஜு முருகனின் செம வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. சென்சார் போர்டால் சர்ச்சைக்குரிய வசனங்கள் உள்ளது என நீக்கப்பட்ட இந்த காட்சி, படத்தில் இடம்பெறாது என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாவின் ஜிப்ஸி ஸ்னீக் பீக் - சென்சார் போர்ட் வெட்டிய காட்சியை வெளியிட்ட படக்குழு.! வீடியோ

Entertainment sub editor