ராஜூ முருகன் மற்றும் ஜீவாவின் ஜிப்ஸி - மூனே நாளில் ஒட்டு மொத்த தமிழ்நாடு வசூல் இவ்வளவா ?
முகப்பு > சினிமா செய்திகள்ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா ஹீரோவா நடித்திருந்த 'ஜிப்ஸி' படம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்க, சன்னி வெய்ன், லால் ஜோஸ், சுஷீலாம் ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, செல்வகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் ரூ.3.41 கோடி வசூலித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் சென்சாரால் நீக்கப்பட்ட காட்சிகள் அவ்வப்போது யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tags : Raju murugan, Gypsy, Jiiva, Santhosh Narayanan