2002-ல் போட்ட பாட்டு... 2020-ல் ரிலீஸ்.! சந்தோஷ் நாராயணன் சொல்லும் 18 வருட ப்ளாஷ்பேக் ஸ்டோரி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் வரும் தேசாந்திரி பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன், அருமையான ப்ளாஷ்பேக் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

ஜிப்ஸி பாடல் குறித்த சந்தோஷ் நாராயணன் | santhosh narayanan opens on jiiva rajumurugan's gypsy desaandhiri song

ஜீவாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிப்ஸி. குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இத்திரைப்படத்தை இயக்கினார். நடாஷா சிங் கதாநாயகியாக நடித்த இத்திரைப்படத்தில், நாடோடியாக வாழும் தெரு இசைப்பாடகராக ஜீவா நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்துக்கு இசையமைத்தார்.

இந்நிலையில் ஜிப்ஸி படத்தில் வரும் தேசாந்திரி பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'தேசாந்திரி பாடல் இதோ. இதை நான் 2002-ல் கம்போஸ் செய்தேன். எனது சொந்த ஊரில் இந்த பாடலை கம்போஸ் செய்த போது வந்த மழையும், காற்றின் வாசமும் இன்னும் நினைவில் இருக்கிறது'' என அவர் பதிவிட்டுள்ளார்.

2002-ல் போட்ட பாட்டு... 2020-ல் ரிலீஸ்.! சந்தோஷ் நாராயணன் சொல்லும் 18 வருட ப்ளாஷ்பேக் ஸ்டோரி. வீடியோ

Entertainment sub editor