''என் லைஃப்ல இப்படி பண்ணதே இல்ல..'' - 70 வயதில் பியர் க்ரில்ஸை ஆச்சர்யப்படுத்திய ரஜினி.!
முகப்பு > சினிமா செய்திகள்ரஜினிகாந்த் பங்கேற்ற Into the Wild நிகழ்ச்சியின் அசத்தும் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக புகழப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே ரஜினிகாந்த், பியர் க்ரில்ஸ் நடத்தும் into the wild நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் கண்டக்டராக இருந்த அனுபவம், கே.பாலச்சந்தர் செய்த அறிமுகம் உள்ளிட்டவை பற்றி ரஜினி பியர் க்ரில்ஸுடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் சவலான மலைக்குன்றின் மீது ஏறி, பியர் க்ரில்ஸை ஆச்சர்யப்படுத்தும் அவர், ரியல் இன்ஸ்பிரேஷன் என 70 வயதில் பாராட்டையும் வாங்கினார். இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில், மார்ச் 23 அன்று ஒளிபரப்பாகவுள்ளது.
Two phenomenal personalities talk about life and nature during a real adventure. Watch Into The Wild with @BearGrylls and Superstar @Rajinikanth as they journey through the jungle. Premieres 23 March at 8 PM. #ThalaivaOnDiscovery
Co-powered by: @pharmeasyapp pic.twitter.com/kecKunzjpv
— Discovery Channel IN (@DiscoveryIN) March 20, 2020