#GOODNEWS - ஜிப்ஸி பட இயக்குநர் ராஜுமுருகனுக்கு குழந்தை பிறந்தது. தாயும் செயும் நலம்.! ஆணா.. பொண்ணா.?!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் ராஜு முருகனுக்கு குழந்தை பிறந்துள்ளது.

குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து இவர் ஜோக்கர் என்கிற படத்தை இயக்கினார். இத்திரைப்படத்துக்காக தேசிய விருதையும் பெற்றார். இதையடுத்து ஜீவா நடிப்பில் இவர் இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் அண்மையில் வெளியானது. இத்திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. நேற்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவரின் மனைவி ஹேமா சின்ஹா நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர்.
Tags : Raju murugan, Gypsy Tamil, Hema Sinha