ராஜூ முருகன் கூட்டணியில் உருவான ஜிப்ஸி பட வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா ஹீரோவா நடித்திருந்த 'ஜிப்ஸி' படம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

ராஜூ முருகன், ஜீவா, சந்தோஷ் நாராயணனின் ஜிப்ஸி பட தேசாந்திரி பாடல் | Raju Murugan, Jiiva, Santhosh Narayanan's Gypsy movie Desanthiri Video S

இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்க, சன்னி வெய்ன், லால் ஜோஸ், சுஷீலாம் ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த  படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, செல்வகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து தற்போது 'தேசாந்திரி' என்ற வீடியோ சாங் தற்போது வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை சித்தார்த், சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர். 4 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பாடலில் கிட்டத்தட்ட பாலைவனம், மலைப்பிரதேசம், சமவெளி, வட இந்தியா, தென்னிந்தியா என இந்தியாவின் நிலப்பரப்பும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது.

ராஜூ முருகன் கூட்டணியில் உருவான ஜிப்ஸி பட வீடியோ சாங் இதோ வீடியோ

Entertainment sub editor