ஆதரவற்ற குழந்தைகளின் ஆசை... மிகப்பெரிய விஷயம் செய்த ஜீவா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜீவா ஆதரவற்ற குழந்தைகளுக்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஜீவா செய்த விஷயம் | gypsy actor jiiva visits jeeva dhanam society and makes childrens happy

தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகனாக கருதப்படுபவர் ஜீவா. இவர் நடித்த ராம், கற்றது தமிழ், கோ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஜிப்ஸி படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஜீவா, இந்தியா முழுவதும் சுற்றி, பாட்டு பாடும் தெருப்பாடகராக நடித்திருந்தார். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இத்திரைப்படத்தை இயக்கினார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஜீவ தானம் அறக்கட்டளைக்கு ஜீவா விசிட் அடித்துள்ளார். ஜீவாவை சந்திக்க வேண்டும் என குழந்தைகள் ஆசைப்படுவதை அறிந்தவுடன், அங்கு இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை சர்ப்ரைஸாக சந்தித்த அவர், அவர்களுடன் பாட்டு பாடி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அனைவருக்கும் தனது ஆட்டோகிராபையும் அவர் போட்டு கொடுத்துள்ளார். ஜீவாவின் வருகையால் ஆதரவற்ற குழந்தைகள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்களாம்.

Entertainment sub editor