உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
![நடிகர் ஜீவா சொன்ன கொரோனா விழிப்புணர்வு பன்ச் டையலாக் Actor Jiiva Tweets a Vera Level Punch dialogue Against Corona நடிகர் ஜீவா சொன்ன கொரோனா விழிப்புணர்வு பன்ச் டையலாக் Actor Jiiva Tweets a Vera Level Punch dialogue Against Corona](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-jiiva-tweets-a-vera-level-punch-dialogue-against-corona-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் பலரும் மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜீவா ஒரு ட்வீட் பதிவிட்டுளளார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டையலாக் ஒன்றை பயன்படுத்தி மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
அதில் அவர் "உள்ளே போ" என்று டையலாக் ஒன்றை கூறி "பத்திரமாக இருங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளே போ! Stay safe
— உள்ளே போ! (@JiivaOfficial) March 25, 2020