www.garudabazaar.com

புதிய Series-ஐ இயக்கும் டைரக்டர் விஜய்! .. டைட்டில் இதுவா? சும்மா யூத்ஃபுல்லா இருக்கே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய்: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஏ.எல்.விஜய். பிற்காலத்தில் விஜய் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.

is this AL Vijay next directorial series title இயக்குநர் விஜய்

மென்மையான கதைக்களங்கள்

நடிகர்கள் அஜீத், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் விஜய் தம்முடைய திரைப்படங்களில் பெரும்பாலும் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக கமிட் செய்து இருப்பார். மென்மையான கதைக் களங்களை எடுத்துக்கொண்டு, உருக வைக்கக்கூடிய கிளைமாக்ஸ் காட்சிகளை தம்முடைய திரைப்படங்களில் கொடுப்பதில் வல்லவர்.

தலைவி..

இயக்குனர் விஜய், கடைசியாக தலைவி திரைப்படத்தை இயக்கி இருந்தார். கங்கனா ரனாவத் நடித்த இந்த திரைப்படம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி எம்ஜிஆர் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சித்திரை செவ்வானம்..

இதேபோல், சமுத்திரக்கனி நடிப்பில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  உருவாகி கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிய ‘சித்திரைச் செவ்வானம் ’ திரைப்படம்  இயக்குனர் விஜய் எழுத்தில் உருவாகியிருந்தது, இந்த படத்தில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஹீரோயினாக நடித்திருந்தார். சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் விஜய் ஏற்கனவே கரு திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

விஜய் இயக்கும் சீரிஸ்

இந்நிலையில் இயக்குனர் விஜய், ஒரு சீரிசை இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த வெப் சீரிஸ் தொடர்பான இதர தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் நமக்கு கிடைத்திருக்கும் நம்பத்தகுந்த தகவல்களின்படி, இயக்குனர் விஜய் இந்த சீரிஸை அவரே தயாரிக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது.‌

டைட்டில் இதுவா?

குறிப்பாக இந்த சீரிஸ்க்கு Dancing Teens என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிகிறது. 

Also Read: வெறித்தனம்.. Title-னாலே இந்த மனுசன் தான்! தமிழ்ப்படம் இயக்குநருடன் விஜய் ஆண்டனி இணையும் அடுத்த படத்துக்கு பேரு  இதுவா?

தொடர்புடைய இணைப்புகள்

is this AL Vijay next directorial series title இயக்குநர் விஜய்

People looking for online information on AL Vijay, Dancing Teens, Vijay will find this news story useful.