www.garudabazaar.com

பரபரப்பு எலிமினேஷன்!.. 105வது நாள் .. BiggBoss கிராண்ட் ஃபினாலேவில் அறிவித்த கமல்ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் 105 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் 18 போட்டியாளர்களில் இணைந்தனர். அதன்பிறகு வாரம் ஒருவர் என்று எலிமினேட் செய்யப்பட்டனர்.

bigg boss 5 grand finale elimination kamalhaasan vijay tv

எலிமினேஷன்

கடைசி வாரங்களில் வருண், அக்‌ஷரா இருவரும் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தாமரை எலிமினேட் செய்யப்பட்டார். தாமரையின் எலிமினேஷனை, தானே எதிர்பார்க்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூ, பிரியங்கா, அமீர், நிரூப், பாவனி உள்ளிட்டோர் இருந்து வந்தனர்.

கிராண்ட் ஃபினாலே

ஒருவழியாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 5வது சீசனின் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். எனினும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முந்தைய சீசன்களின் போட்டியாளர்களை அழைக்க முடியவில்லை என்று கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

Also Read: BiggBoss நினைவா ராஜூ எடுத்துட்டு போகும் பொருள் இதுதான்!.. ஃபீல் பண்ணி அவரே சொன்ன காரணம்!

இதனிடையே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜூ வெற்றி பெற்றதாக ஏற்கனவே தகவல்கள் பரவத் தொடங்கின. அத்துடன் ராஜூ பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பின்னர், கையில் பிக்பாஸ் கோப்பையுடன் நிற்கக்கூடிய புகைப்படங்களும் இணையத்தில் தொடர்ந்து வருவதை காணமுடிந்தது.

அனைவருமே வெற்றியாளர்கள்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே அன்று, “இந்த ஸ்கிரீனில் நான் பார்க்கக்கூடிய பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருமே ஜெயித்தவர்கள் தான்!” என்று கமல்ஹாசன் முதலில் பாராட்டினார். பின்னர் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கோப்பையை அறிமுகப்படுத்தி அவர்களை தொட்டு பார்க்கவும் அனுமதி தந்தார்.

Also Read: எதிர்நீச்சல் அடி... ஜெயிச்சாப்புறம் trophy-யுடன் கெத்து காட்டும் ராஜூ.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

கடைசி நாள் எலிமினேஷன்

அதன்பிறகு சில நடன குழுவினரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிய கமல்ஹாசன், இந்த தினத்தில் எலிமினேட் செய்யப்படும் ஒரு போட்டியாளரை அழைத்து வருமாறு அனுப்பினார். இந்த பிக்பாஸ் சீசன் 5-ன் கடைசி நாளான 105வது நாள் நிகழ்ச்சியில் நிரூப் எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மற்றவர்களின் கண்கள் கட்டப்பட்டு, நிரூப்பும் கண் கட்டப்பட்டு நடனக்குழுவினரால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து அமீரும் எலிமினேட் செய்யப்பட்டார். 

Also Read: சிவகார்த்திகேயன் வாழ்த்திய அந்த 3 பேர்! ... BiggBoss5-வது சீசன் கோலகல finale கொண்டாட்டம்!

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss 5 grand finale elimination kamalhaasan vijay tv

People looking for online information on Amir, Bigg boss 5 grand finale, Bigg boss 5 raju title winner, Bigg Boss 5 Tamil, Bigg boss 5 tamil grand finale, Bigg boss raju title winner, Kamal Haasan, Niroop, Priyanka, Raju Bhai, Raju wins, Vijay Television will find this news story useful.