www.garudabazaar.com

விஜய்-யின் Beast.. first Single எப்போ?.. சரவெடி அப்டேட்.. பிரபல இளம் ஹீரோ பாட்டு எழுதிருக்காரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட்:  கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் தீலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.

vijay beast first single date is this hero penned lyrics deets

நடிகர்கள் விபரம்

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு கட்டமாக நடந்துவந்த நிலையில், இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தன. இப்படத்தின் நாயகியாக பூஜாஹெக்டே நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கிறார். இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

இசை, ஒளிப்பதிவு 

vijay beast first single date is this hero penned lyrics deets

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார். இதனிடையே இப்படத்தின் 100 நாள் ஷூட்டிங் நடந்து முடிந்ததை அடுத்து ஒரு புகைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அண்மையில் பகிர்ந்திருந்தார்.

முதல் சிங்கிள் பாடல்

இந்நிலையில் இப்படத்தின் முக்கியமான அப்டேட்டான பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்

vijay beast first single date is this hero penned lyrics deets

அதுமட்டுமின்றி இப்படத்தின் பாடல்களுள் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அனிருத் இசையில்  உருவான அந்த படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியிருந்தார். இதேபோல் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன.

ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ்?

இந்த நிலையில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் பாடல் சிவகார்த்திகேயன் எழுதிய பாடலா உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் படக்குழு தரப்பில் இருந்து எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

Also Read: ‘சேலை கட்டுனா’.. தாமரை.. குட்டை கவுன் போட்டா .. ஐக்கி.. ‘ஓ சொல்றியா’ இவங்க வெர்ஷன்!.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay beast first single date is this hero penned lyrics deets

People looking for online information on Beast, Beast first single, Lyrics sivakarthikeyan will find this news story useful.