www.garudabazaar.com

"ஹேப்பி பர்த்டே பார்ட்னர்.." இன்ஸ்டாவில் காதலியை அறிமுகம் செய்த 'புகழ்'..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியின் மூலம், அதில் கோமாளியாக வந்த புகழ், மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

vijay tv pugazh wishes his girlfriend on her birthday fans react

இந்த நிகழ்ச்சியில், புகழ் சொல்லும் டைமிங் காமெடிகள், வரும் பெண் போட்டியாளர்களிடம் அவர் செய்யும் ரோமான்ஸ்கள், அதிக அளவில் அவரை பிரபலமாக்கியது.

இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக, தற்போது திரைப்படங்களிலும், புகழ் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ரியா என்ற பெண்ணுடன் இருக்கும், அந்த புகைப்படத்தை பதிவிட்ட புகழ், 'ஹேப்பி பர்த்டே பார்ட்னர். லவ் யூ' என குறிப்பிட்டுள்ளார்.

 

 

இந்த பதிவு, மிகவும் வேகமாக, ரசிகர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது. அது மட்டுமில்லாமல், விஜய் டிவி பிரபலங்கள் சிவாங்கி மற்றும் பவித்ரா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

vijay tv pugazh wishes his girlfriend on her birthday fans react

புகழ் காதலித்து வரும்  பெண் இவர் தான் என ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், இருவருக்கும் தங்களின் வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

vijay tv pugazh wishes his girlfriend on her birthday fans react

People looking for online information on Pavithra Lakshmi, Sivaangi, Vijay Tv Pugazh will find this news story useful.