www.garudabazaar.com

விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனின் மைக்கேல்.. படத்தில் இணைந்த பிரபல நடிகை!.. வில்லன் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Michael: சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி  நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி பான் இந்திய படம் “மைக்கேல்”.

Varalashmi joins Sundeep Kishan Vijay Sethupathi Michael movie

நடிகர் சந்தீப் கிஷன்

பல மொழிகளிலும் வெற்றி பெற்ற  தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படும் நடிகர் சந்தீப், தமது சிறப்புமிக்க  திரைக்கதை தேர்வுகள் மூலம் சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தற்போது சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும், ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் எண்டர்டெய்னரான  “மைக்கேல்” படத்தில் நாயகனாக  நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்திருக்கிறார்.

தயாரிப்பு நிறுவனம்

பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள்  இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றன.

Also Read: ஆந்திராவை உலுக்கிய துணை நடிகை ஜோதி ரெட்டி மரணம்.. புஷ்பா படத்துல நடிச்சிருக்காங்களா?

நடிகை வரலட்சுமி இணைந்தார்..

இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

வில்லனாக கவுதம் மேனன்

தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் வித்தியாசமான திரைக்கதையில், நடிகர் சந்தீப் கிஷன் ஒரு அழுத்தமிகுந்த பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

 

‘மைக்கேல்’ திரைப்படம் பரத் சௌத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக, நாராயண் தாஸ் K  நரங் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Also Read: ரயிலில் விழுந்து இளம் துணை நடிகை பலி.. தெலுங்கு திரையுலகில் சோகம்!.. நடந்தது என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Varalashmi joins Sundeep Kishan Vijay Sethupathi Michael movie

People looking for online information on Michael, Sundeep Kishan, Vijay Sethupathi will find this news story useful.