Veetla Vishesham Others Page USA

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் Musical video… CWC அஸ்வின் நடிப்பில் உருவாகும் ‘வாடி’ ரிலீஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘வாடி’ மியுசிக்கல் ஆல்பம் உருவாகியுள்ளது.

Harris jayaraj first musical vaadi song release update

Also Read | காத்திருந்த ரசிகர்களுக்கு…. பீஸ்ட் படத்தின் OST ரிலீஸ்… சன் பிக்சர்ஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

ஹாரிஸ் ஜெயராஜ்…

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் மற்றும் கமல்ஹாசன் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அண்மையில் இவரது இசையில் ‘தி லெஜண்ட்’ படத்தில் இருந்து வெளியான பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

கௌதம் மேனன்- ஹாரிஸ் காம்போ…

மின்னலே படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் , அதன் பின்னர் கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியது. இந்த படங்களின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் ஏ ஆர் ரஹ்மானுடன் சில படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார். பின்னர் இந்த கூட்டணி என்னை அறிந்தால் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர்.

கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி போலவே வேறு சில இயக்குனர்களோடும் ஹாரிஸ் தொடர்ந்து பணியாற்றி பல வெற்றி பாடல்களைக் கொடுத்துள்ளார். அதில் முக்கியமாக ஜீவா – ஹாரிஸ் ஜெயராஜ், கேவி ஆனந்த் – ஹாரிஸ் ஜெயராஜ்ம் ஷங்கர் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான படங்களும் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தன. 90ஸ் கிட்ஸ் மற்றும்  2k கிட்ஸ் இளைஞர்களின் விருப்பத்துக்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் ஹாரிஸ்.

Harris jayaraj first musical vaadi song release update

‘வாடி’ இசை ஆல்பம்…

இந்நிலையில் இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முறையாக தனி இசை ஆல்பம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த ஆல்பம் பற்றிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. ’வாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த  ஆல்பத்தில் குக்வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ளார். அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ் போன்ற மியுசிக் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

திங் ம்யூசிக் நிறுவனம் வெளியிடும்  திங் ஒரிஜினல்ஸாக வெளியாகும் இந்த ஆல்பத்தின் பாடலை விவேகா எழுத, கார்த்தி அரசு இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக R D ராஜசேகர் பணியாற்றியுள்ள ‘வாடி’ இசை வீடியோ வரும் ஜூன் 29 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள முதல் music video என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Also Read | ”தனுஷும் செல்வராகவனும் சேர்ந்து நடிப்பாங்களா…” தயாரிப்பாளர் தாணு சொன்ன பதில்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Harris jayaraj first musical vaadi song release update

People looking for online information on CWC, CWC Ashwin, Harris Jayaraj, Harris jayaraj first musical vaadi song release will find this news story useful.