Veetla Vishesham Others Page USA

”தனுஷும் செல்வராகவனும் சேர்ந்து நடிப்பாங்களா…” தயாரிப்பாளர் தாணு சொன்ன பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்க, தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தைத் தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார்.

Kalaipuli S Thanu update on Naane varuvean movie

Also Read | காத்திருந்த ரசிகர்களுக்கு…. பீஸ்ட் படத்தின் OST ரிலீஸ்… சன் பிக்சர்ஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

தனுஷ்- செல்வராகவன்

மயக்கம் என்ன திரைப்படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். மற்றொரு வெளிநாட்டு நடிகையும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Kalaipuli S Thanu update on Naane varuvean movie

படப்பிடிப்பு..

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கீர்த்தி சுரேஷுடன் சாணிகாயிதம் என்ற படத்தில் நடித்து வரும் செல்வராகவன் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் விதம் பிடித்துப்போக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் யாமினியும் தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியதால், அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இந்த படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் அதன் பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kalaipuli S Thanu update on Naane varuvean movie

நானே வருவேனில் செல்வராகவன்?

சமீபத்தில் நடந்த Behindwoods Gold விருதுகள் விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவனுக்கு “MOST IMPACTFUL PERFOMANCE OF THE YEAR” விருது சாணிக் காயிதம் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டது. இந்த விருதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வழங்கினார். அப்போது தாணு, தான் தயாரித்து தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவரிடம் “தனுஷும் செல்வராகவனும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார்களா” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அதற்கான பதிலை செல்வராகவன்தான் சொல்லவேண்டும்” எனக் கூறியுள்ளார். படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "சீரியல் கில்லர் வரும்போது ஒரு copy cat-ம் வருவான்.." - ஜெய், சுந்தர்.C நடிக்கும் ‘பட்டாம்பூச்சி’ Sneak peek

”தனுஷும் செல்வராகவனும் சேர்ந்து நடிப்பாங்களா…” தயாரிப்பாளர் தாணு சொன்ன பதில் வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kalaipuli S Thanu update on Naane varuvean movie

People looking for online information on Dhanush, Kalaipuli S Thanu, Naane varuvean movie, Naane varuvean movie updates will find this news story useful.