"என்னோட உயிரின் உயிரே பிரிஞ்சிடுச்சு.." பிரபல பாடகர் மறைவால் உடைந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பின்னணி பாடகரான கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத், தனது 53 ஆவது வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read | மாஸ் Stylish லுக்கில் விஜய் சேதுபதி… வைரலாகும் ‘விக்ரம்’ படத்தின் புதிய BTS புகைப்படம்
ஹிந்தி தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில், எக்கச்சக்க பாடல்களை பாடி பிரபலம் ஆனவர் பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் கிருஷ்ணகுமார் குன்னத் (KK).
அது மட்டுமில்லாமல், KK-யின் குரலுக்கென்றே ரசிகர் கூட்டம் அதிகம் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய பாடலால் மக்களை கட்டிப் போட்டு வந்த கேகே, நேற்று நள்ளிரவு திடீரென உயிரிழந்துள்ளார்.
இசை நிகழ்ச்சியில் KK
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேகேவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மாரடைப்பின் காரணமாக கேகே உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
வேதனையில் ரசிகர்கள்
53 வயதே ஆகும் கேகே, தமிழில், உயிரின் உயிரே, காதல் வளர்த்தேன், Strawberry கண்ணே, அப்படி போடு போடு, காதலிக்கும் ஆசை இல்லை, ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி உள்ளிட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் சரவணன் நடிப்பில், தி லெஜண்ட் படத்தில் இருந்து வெளியான பாடல்களில், 2 பாடல்களையும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடி இருந்தார் கிருஷ்ணகுமார் குன்னத்.
அப்படி இருக்கும் நிலையில், கிருஷ்ணகுமார் குன்னத்தின் உயிர் பிரிந்துள்ள சம்பவம், ஏராளமானோரை கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
உடைந்து போன ஹாரிஸ்
இது தொடர்பாக இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய உயிரின் உயிரே மறைந்து விட்டது. அவருடைய கடைசி பாடலான 'கொஞ்சி கொஞ்சி'யை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்து சேர்ந்துள்ளது. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர இசை அமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரையும் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
Also Read | பாடகர் KK பாடிய கடைசி தமிழ் பாடல்… ‘தி லெஜண்ட்’ பட இயக்குனர்கள் பகிர்ந்த வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Harris Jayaraj Talked Saravanan Acting The Legend Movie
- Harris Jayaraj To Compose Music For SK 21 Sources
- Harris Jayaraj To Compose Music For SK 21 Sources
- Harris Jayaraj Shared The Starting Lyrics Of Legend Movie Single
- Harris Jayaraj Musical Legend Movie First Single Update
- Harris Jayaraj Legend Movie Music Rights Bagged By Think Music
- Harris Jayaraj Mugen Rao New Music Album Update
- Harris Jayaraj Muken Rao New Music Album Update
- Harris Jayaraj Condoles The Demise Of KV Anand
- Extremely Shock RIP My Friend KV Anand Harris Jayaraj
- நடராஜன் கதை கேட்டு ஹாரிஸ் ஜெயராஜ் எமோஷனல் | Harris Jayaraj Emotional Tweet On Natarajan's Parents Interview
- ஹாரிஸ் ஜெயராஜ் குடும்ப புகைப்படங்கள் | Harris Jayaraj Wedding Anniversary Photos Goes Viral
தொடர்புடைய இணைப்புகள்
- யாஷிகாவும் கம்பீர சரவணனும்.. லீக்கான குறும்படம்..! கேமிராவுக்கு பின்னால்!!
- Legend Saravanan கடையில Dress வாங்கிட்டு, அவரோட Video பத்தி என்ன சொல்லிட்ருக்காங்க பாருங்க...
- இதுதான் நம்ம HARRIS VIBE 😍😍 மனுஷன் செதுக்கி இருகாப்புள
- "தமிழர்களுக்கு நீங்க வாய்ப்பு தருவீர்களா?" - Yohani Controversy
- "Yohani விஷயத்தை அரசியலாக்காதீங்க..!" - Yohani Controversy
- "தமிழகத்தில் பாடகர்களே இல்லையா..?" - Yohani Controversy
- "யோஹானி வருத்தம் கூட தெரிவிக்காதது ஏன்?" - யோஹானி பாட்டு பஞ்சாயத்து
- "இலங்கை அகதிகளுக்கு என்ன செஞ்சீங்க..?" - யோஹானி பாட்டு பஞ்சாயத்து
- "தமிழ் பாடகர்களுக்கு அங்க வந்து பாட முடியுமா..?" - யோஹானி பாட்டு பஞ்சாயத்து
- "ஒரு பாட்டுக்கு இவ்வளோ பஞ்சாயத்தா..?" - யோஹானி பாட்டு சர்ச்சை! | காரசார விவாதம்
- Flight Laye Music Potrukapla 😅❤#HarrisJayaraj #Irumugan #Teaser #BehindwoodsMemes
- Evlo Cute Ah Pesuranga Pa!! 😍❤#NikitaHarrisJayaraj #HarrisJayaraj #Throwback #BehindwoodsMemes