“அப்போ shock-ஆ இருந்துச்சு… இப்போ ஹேப்பி”… ‘தி லெஜண்ட்’ ஆடியோ விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணன் அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

Harris jayaraj talked Saravanan acting The legend movie

Also Read | “வேற Heroes கூட சேர்ந்து நடிப்பீங்களா…” 'தி லெஜண்ட்' பட விழாவில் சரவணன் மாஸ் பதில்.!

தி லெஜண்ட்…

நடிகர் சரவணன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ’தி லெஜண்ட்’படத்தை  ஜேடி –ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.  பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.

Harris jayaraj talked Saravanan acting The legend movie

ஆடியோ & டிரைலர்…

இதையடுத்து நேற்று (மே 29) இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகைகளான தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனோன், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் ராய்லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடினர். விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர். பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Harris jayaraj talked Saravanan acting The legend movie

ஹாரிஸ் ஜெயராஜ் …

படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில் “நானும் சரவணனும் 12 ஆண்டுகளுக்கும் மேல நல்ல நண்பர்கள். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய விஷயங்கள் பத்தி விவாதிப்போம். ஒரு நாள் அவர் நடிக்க போறன்னு சொன்னதும் எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு. இவர் எப்படி நடிப்பாரு, அத மக்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு கேள்வியும் இருந்துச்சு. ஆனா இந்த படத்துல அவர் ரொம்ப நல்லா நடிச்சுருக்காரு. இந்த படம் மட்டுமில்லாம இன்னும் பல படங்கள்ல அவர நீங்க பாக்கப் போறீங்க. அவர் ரொம்பவும் தன்னடக்கமான மனிதர்” என்று கூறியுள்ளார்.

Harris jayaraj talked Saravanan acting The legend movie

தி லெஜண்ட் படத்துக்கு ஹாரிஸின் இசையும் பின்னணி இசையும் மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | "அந்த 60 நிமிஷம் இருக்கே.." சூப்பர்ஸ்டாருடன் SK எடுத்துக் கொண்ட ஃபோட்டோ.. அவர் போட்ட Caption தான் 'செம'

தொடர்புடைய இணைப்புகள்

Harris jayaraj talked Saravanan acting The legend movie

People looking for online information on Harris Jayaraj, Saravanan, The Legend movie, The legend movie audio launch will find this news story useful.