அடுத்தப்படம் குறித்த சர்ச்சை - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை ஹன்சிகா மோத்வானியின் அடுத்த திரைப்படம் குறித்து பரவிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Hansika clarifies rumours of romancing Legend Saravana owner

பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கும் திரைப்படத்தின் ஹீரோயினாக நடிகை ஹன்சிகா ஒப்பந்தமாகியிருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவின. இதனை மறுக்கும் விதமாக நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் “NOT TRUE” என ட்வீட் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஹன்சிகா ஊடக நண்பர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள். நான் ஆர்ட்டிஸ்டாக இருந்தது முதல் இன்று வரை எனது திரை பயணத்தில் தூணாக உறுதுணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களது சரியான விமர்சன, ஊக்குவித்த காரணத்தால் தான் எனது திறமையை வளர்த்து, சில தனித்துவமான படங்களில் அங்கமாக இருந்திருக்கிறேன். இன்று என்னை பற்றி வெளியான செய்தி ஒன்றில் துளியும் உண்மை இல்லை”.

“ஊடக நண்பர்கள் எனது புதுப்படங்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு முன் அது பற்றி என்னிடம் விளக்கம் கேட்காமல் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். எனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனம் அல்லது எனது செய்தி தொடர்பாளர் மூலம் அறிவிப்பு வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.