சிறுமி பாலியல் படுகொலை குறித்து சினிமா பிரபலங்கள் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த பன்வாரிலால் சர்மா என்பருக்கு இரண்டரை வயது மகள் உள்ளார். கடந்த மே 31 ஆம் தேதி  குழந்தை ட்விங்கிள் திடீரென்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. தீவிரமாக குழந்தையை தேடிவந்த நிலையில் அருகே உள்ள குப்பை கிடங்கில் சிறுமி ட்விங்கிளின் உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது.

Hansika Motwani, Rakul Preet Singh, Simran Comments on Twinkle Sharma Issue

மேலும் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, குழந்தையின் கையை வெட்டி, கண்ணை நோண்டி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் அவரது உடலில் ஆசிட் ஊற்றி குப்பையில் எரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் விவாதமாக மாறிவருகிறது. குழந்தைக்கு இரங்கல் தெரிவித்தும் , குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது பக்கத்து வீட்டில் உள்ள ஷாகித் என்பவர் தனது உதவியாளருடன் இதனை செய்தது தெரியவந்துள்ளது. ட்விங்கிளின் தந்தை வாங்கிய ரூ.10000 கடனை திருப்பி தராததால் இத்தகைய குற்றத்தை அவர் செய்துள்ளதாக அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கு இந்திய சினிமா பிரபலங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டவுடன் நான் மனரீதியாக  மிகவும் பாதிக்கப்பட்டேன். ட்விங்கிளுக்குநீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ரகுல் பிரீத் சிங், ட்விங்கிள் சர்மா குறித்து கேள்வி பட்டவுடன் மிகவும் மனகஷ்டமாக உணர்கிறேன். ட்விங்கிள் சர்மாவுக்கு நீதி வேண்டும். குற்றவாளிக்கு மரணம் மட்டும் போதுமானதாக இருக்காது என்றார். 

நடிகை சிம்ரன், மனிதர்களாக இருந்து கொண்டு ஒன்றும் அறியாத குழந்தையிடம் இப்படி நடந்துகொள்ள முடிகிறது. இந்த சம்பவத்திற்கு சரியான நீதி வேண்டும். இதுபோன்று உலகில் எங்கும் நடைபெறக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.