ஹன்சிகாவின் ‘மஹா’-வில் இணைந்த பிக் பாஸ் 3 பிரபலத்தின் Love Interest

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யு.ஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டி இணைந்துள்ளார்.

Sanam Shetty joins Hansika 50 titled as Maha STR cameo

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வரும் பாடல் காட்சியின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘மஹா’ படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தற்போது சிம்புவையடுத்து, இப்படத்தில் புதிதாக நடிகை சனம் ஷெட்டி இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மக்கள் விரும்பும் போட்டியாளராக இருக்கும் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி ஆவார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் மற்றும் தர்ஷன் இடையே மலர்ந்த உறவையடுத்து, தனது காதலை விட்டுக் கொடுப்பதாக சனம் ஷெட்டி தெரிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.