ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு கேமியோ ரோலில் நடிக்கிறார். ‘மஹா’ படத்தில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது கோவாவில் படமாக்கப்பட்டு வருகிறது.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் பணியாற்றுவது குறித்து தயாரிப்பாளர் மதியழகன் கூறுகையில், திட்டமிட்டபடி 8 நாட்கள் தொடர் ஷூட்டிங் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் STR மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, பிரேக்-அப், மீண்டும் சேருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பவுள்ளது என்றார்.
மேலும், சிம்பு பற்றி வெளியே சொல்லப்பட்டதற்கு இது முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. எங்களிடம் கேரவன் கூட இல்லை, அதனால் ஏதும் பிரச்சனை வரும் என்று எதிர்ப்பார்த்தோம், இது திரையில் வரப்போவதில்லை நாம் ஷூட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்றார். கேரவன் இல்லை என்றதும் இன்னோவா காரிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு, அவ்வப்போது வந்து காட்சிகள் பற்றி கேட்பார். மற்ற தயாரிப்பாளர்களிடம் ஒரு வேண்டுகோள் சிம்புவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாருங்கள்’ என மதியழகன் கூறியுள்ளார்.
இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருவதாகவும், அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார். இப்படத்திற்கு வந்த சிக்கல்களையும், சவால்களையும் எளிதாக சமாளித்த இயக்குநர் ஜமீல் உடன் பணிபுரிவதிலும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.