ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' வில் நடிக்கிறாரா தர்ஷன் ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 03, 2019 10:49 AM
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றவர் தர்ஷன். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக பிக்பாஸ் போட்டியாளர்களே தர்ஷன் தான் இந்த சீசன் வின்னர் என்று போற்றப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டு அதிர்ச்சி அளித்தார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் தங்கள் வேதனையை ட்விட்டர் பக்கங்கள் வாயிலாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தர்ஷன், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவிருப்பதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டவண்ணம் இருந்தன. எங்கள் தரப்பில் விசாரித்தபோது அந்த செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று தெரியந்துள்ளது.
Tags : Kamal Haasan, Indian 2, Tharshan, Bigg Boss 3, Shankar