www.garudabazaar.com

கௌதம் & மஞ்சிமா திருமணம்.. நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய கல்யாண வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமண வீடியோ வெளியாகி உள்ளது.

Gautam Karthik Manjima Mohan Wedding Function Video

Also Read | ஜனனி & அமுது Code word யூஸ் பண்ணாங்களா..?.. பரபரப்பை கிளப்பிய நாமினேஷன்..! bigg boss 6 tamil

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Gautam Karthik Manjima Mohan Wedding Function Video

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Gautam Karthik Manjima Mohan Wedding Function Video

நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் திரையுலக நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Gautam Karthik Manjima Mohan Wedding Function Video

இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமண வீடியோ காட்சிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன.

Gautam Karthik Manjima Mohan Wedding Function Video

மஞ்சிமா கழுத்தில் தாலி கட்டும் காட்சிகள், நடிகர் கார்த்தி மணமக்களை ஆசிர்வாதம் செய்யும் காட்சிகள், அம்மா ராகினி மகன் கௌதம் கார்த்திக்கை அழைத்து வருவது, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம் பிரபு, சுரேஷ் கோபி, அசோக் செல்வன், இயக்குனர் மணிரத்னம், கௌதம் மேனன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் தங்களது காதல் தருணங்கள் முதல் திருமண தருணங்கள் வரை கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் பேசும் வீடியோ காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. முக்கிய உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

கௌதம் & மஞ்சிமா திருமணம்.. நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய கல்யாண வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gautam Karthik Manjima Mohan Wedding Function Video

People looking for online information on Gautam Karthik Manjima Mohan Wedding Function, Gautham Karthik, Manjima Mohan will find this news story useful.