www.garudabazaar.com

திருமணத்திற்கு முன் கௌதம் & மஞ்சிமா போட்டோ ஷூட்.. வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு முன் ஃபோட்டோ ஷூட் நடத்தி உள்ளனர்.

Manjima Mohan Gautam Karthik Latest Photoshoot before Marriage

Also Read | ஸ்வீட் எடுங்க.. ஆண் குழந்தைக்கு அப்பாவான ‘அஞ்சாதே’ நரேன் 😍

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Manjima Mohan Gautam Karthik Latest Photoshoot before Marriage

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Manjima Mohan Gautam Karthik Latest Photoshoot before Marriage

‌‍ மேலும் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து எடுத்த சில போட்டோ ஷூட் புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

Manjima Mohan Gautam Karthik Latest Photoshoot before Marriage

நடிகை மஞ்சிமா மோகன் & நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தங்களது திருமணம் சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக நடைபெறும் என்று கூறினர். மேலும் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Manjima Mohan Gautam Karthik Latest Photoshoot before Marriage

இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் இணைந்து ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். பத்திரிகையாளர் சந்திப்பின் நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இவை அமைந்துள்ளன. இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராஃபர் கிரண் எடுத்துள்ளார்.

Also Read | ரன்பீர் கபூர் & ஆலியா பட் குழந்தைக்கு பெயர் வச்சாச்சு.. பேருக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா!

தொடர்புடைய இணைப்புகள்

Manjima Mohan Gautam Karthik Latest Photoshoot before Marriage

People looking for online information on Gautham Karthik, Manjima Mohan, Manjima Mohan Gautam Karthik Latest Photoshoot will find this news story useful.